» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மக்களுக்கு ரூ.1000 வேண்டாம், இலவசமாக குடிநீர் கொடுத்தால் போதும்! - சீமான் பேட்டி!!

சனி 8, ஜூலை 2023 11:45:29 AM (IST)

"மக்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வேண்டாம். இலவசமாக குடிநீர் கொடுத்தால் போதும்" என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். 

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அளித்த பேட்டியில், நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும்; களத்தில் நிறைய வேலைகள் இருக்கின்றன. வேலைகளைப் பார்க்கட்டும். தவறில்லை. தமிழகத்தில் சாதிய பிரச்னைகள் இருக்கின்றன என்பதை ப. ரஞ்சித்தும், மாரி செல்வராஜும் பதிவு செய்கிறார்கள். அதில் தவறில்லை. அரை நூற்றாண்டு காலம் பெரியார் மண் என்று சொல்லி வந்தார்கள்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பட்டியலினத்தைச் சேர்ந்தவரை பேரவைத் தலைவராக்கினார். திருச்சி பொதுத்தொகுதியில் தலித் எழில்மலையை நிற்கவைத்து வெற்றி பெற வைத்தார். திமுக ஏன் ஆ. ராசாவை நீலகிரிக்கு அனுப்ப வேண்டும்? பெரம்பலூர் பொதுத் தொகுதியிலேயே நிறுத்தி வெற்றி பெற வைக்கலாமே?

மலை, மண் வளம் என்பது அடுத்து வரப்போகிற தலைமுறைக்கும் சேர்த்து இயற்கை கொடுத்த கொடை. இவற்றை கொள்ளையடித்தால் அடுத்து வரும் தலைமுறை எங்கே போவார்கள்? இப்போதே ஒரு குடம் குடிநீருக்கு ரூ. 15 கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் மாதத்துக்கு பெருந்தொகை செலவாகிறது. எங்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வேண்டாம். வைத்துக் கொள்ளுங்கள். மக்களுக்கு இலவசமாக குடிநீர் கொடுத்தால் போதும்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட ராகுல்காந்தியை நீங்கள் எப்படி தகுதி நீக்கம் செய்யலாம். மக்களால் தோற்கடிக்கப்பட்டவரை எல்லாம் மாநிலங்களவை உறுப்பினராக்குகிறீர்கள்? ராகுல்காந்திக்கு குஜராத் நீதிமன்றத்தில் எப்படி நீதி கிடைக்கும்? நாம் தமிழர் கட்சியைப் பொருத்தவரை ஜனநாயகமாக முடிவெடுத்து சர்வாதிகாரமாக செயல்படுத்துவதுதான்.  ஒரு கப்பலுக்கு ஒரு மாலுமி தான் இருக்க முடியும்; ஒரு பேருந்துக்கு ஒரு ஓட்டுநர்தான் இருக்க முடியும். ஓட்டத்தெரியும் என்பதால் எல்லோரும் ஒரே பேருந்தை ஓட்ட முடியாது. இப்படித்தான் நாம் தமிழர் கட்சி நடைபெறும் என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து

kamarajar fansJul 17, 2023 - 05:00:44 PM | Posted IP 172.7*****

தேர்தல் வாக்குறுதி 1000 கொடுப்பது ஏமாற்று வேலை , மக்களுக்கு தெரியவேண்டாமா? ரூபாய்க்கு 1படி அரிசி என்ற திமுக வாக்குறுதியை நம்பி ஒரு நேர்மையான தலைவர் காமராஜரை வீழ்த்திய மக்கள் . இன்று வரையிலும் அவர்கள் வாக்குறுதியை எப்படி நம்புகிறார்கள்......மக்கள்தான் முதலில் திருந்த வேண்டும்.....

UNMAITHANJul 13, 2023 - 04:18:58 PM | Posted IP 172.7*****

உண்மைதான் . சைமன் அருளானந்தம் , இவன் மிசினரி, மதபோதகர். கோமாளித்தனமான மட்டமாக பேசுபவன். இந்துக்களை மட்டும் விமரிசிக்கிறான். லூசு பய.

கோமாளிகளே ..Jul 11, 2023 - 03:56:23 PM | Posted IP 172.7*****

சைமன் குரூப் எல்லாம் மன நோயாளிதான். அடேய் வெங்காயம், நங்கள் உபிஸ் இல்லை , பேனா சிலை வைப்பதில் எங்களுக்கும் உடன்பாடில்லை , ஆனால் அதை இந்த கோமாளி செபாஸ்டியன் சொல்வதற்கு எந்த அருகதையும் இல்லை simon ஒரு அரைவேக்காடு.... இவனால் ஒரு ஆணியையம் புடுங்க ....களத்தில் இறங்கி உண்ணாவிரதம் இருக்கட்டும் , அதை செய்வானா இந்த ஜோக்கர்.....

இவர் ஒரு ஜோக்கர் அவர்களுக்குJul 11, 2023 - 11:04:15 AM | Posted IP 162.1*****

அவன் டம்மி பீஸ் இருக்கட்டும், 80 கோடி நம்ம மக்கள் பணம் , திமுக கல் உடைத்து சம்பாதித்த குடும்ப பணமா? மெரினா பீச் திமுக குடும்ப சொத்தா? முதல்ல மாதம் 1000 ரூபாய் உருப்படியா கொடுக்க சொல்லுடா கொத்தடிமை

இவர் ஒரு ஜோக்கர்Jul 10, 2023 - 04:50:00 PM | Posted IP 172.7*****

கடலில் பேனா சின்னம் வைக்க தயாராகிவிட்டார்கள்.....ஆமை கடல் கடந்து போய்விட வேண்டியதுதான்...சும்மா கூவினால் போதுமா ? மக்கள் நலத்தில் உங்கள் கட்சியின் செயல்பாடுகள் ஒன்றுமே இல்லை சைமன் பெரிய காமெடியன்.....டம்மி பீஸ்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory