» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தம் பதவியின் தரத்தையே தாழ்த்துகிறார் பிரதமர் மோடி : முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 10:59:06 AM (IST)

டி.வி. முன், மோடி தோன்றினாலே மக்கள் அலறியதுதான் பிரதமரின் ஒரே சாதனை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "இரவில் டி.வி. முன் மோடி தோன்றினாலே, இந்திய மக்கள் அலறியதுதான் அவரது ஒரே சாதனை! பிரதமராகத் தொடர முடியாத அச்சத்தில் பிரிவினை வாதத்தைத் தூண்டியும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை அவதூறு செய்தும் தம் பதவியின் தரத்தையே தாழ்த்துகிறார்.

ஒருவர் உண்ணும் உணவு பற்றிப் புகார் கூறி வாக்கு சேகரிக்கும் மலிவான செயல் இதுவரை எந்தப் பிரதமரும் செய்யாதது..! அம்பேத்கர் இயற்றிய சட்டம் இருக்க வேண்டுமா, RSS சொல்லும் சட்டம் இருக்க வேண்டுமா என்பதை முடிவுசெய்யும் தேர்தல் இது. இந்தியாவில் மதநல்லிணக்கம் நீடிக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கவும் " என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors


Arputham Hospital




Thoothukudi Business Directory