» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
அதிமுகவுக்கு ஓபிஎஸ் தலைமை ஏற்க வலியுறுத்தி போஸ்டர்: கோஷ்டி பூசல் உச்சகட்டம்!
புதன் 15, ஜூன் 2022 11:59:44 AM (IST)

அதிமுகவுக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்க வலியுறுத்தி, சென்னையின் முக்கிய இடங்களில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பொதுக்குழுத் தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டம் நடைபெற்றபோது, கட்சி அலுவலகத்தின் வெளியில் இருந்த தொண்டர்கள் கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, அதிமுக முன்னாள் அமைச்சர், கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என்பது குறித்து கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியதாகவும், அந்த ஒற்றைத் தலைமை யார் என்பது குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை உள்ளிட்ட சென்னையின் முக்கிய இடங்களில், அதிமுகவுக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர்களில், " மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவரே , ஒற்றை தலைமை ஏற்று கட்சியை வழிநடத்த வாருங்கள்" என்றும், " தொண்டர்கள் விரும்பும் ஒற்றை தலைமை ஓபிஎஸ் தலைமையே" என்றும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், வெகுநாட்களாகவே ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளுக்கு இடையே கோஷ்டி பூசல் நிலவி வந்தது. ஆனால், அப்போதெல்லாம், அதுபோன்ற சூழல் இல்லை என்று அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தற்போது ஒற்றைத் தலைமை கோரிக்கை அக்கட்சியில் தலைதூக்க தொடங்கியிருக்கிறது. இதனால் மூடிமறைக்கப்பட்ட கோஷ்டிப்பூசல் வெளிச்சத்து வந்துள்ளது.
மக்கள் கருத்து
RAMA RAMAJun 24, 2022 - 12:16:35 PM | Posted IP 162.1*****
OPSயிடம் தலைமை பொறுப்பை கொடுப்பதற்கு திமுகவிடம் அடகு வைக்கவா?
ஜெ .தொண்டர்Jun 16, 2022 - 06:11:01 PM | Posted IP 162.1*****
ஜெ .மறைவுக்கு பிறகு ஒரு சிறந்த ஆளுமை படைத்தவர் எடப்பாடி பழனிசாமி அவரது திறமையால் தமிழ்நாட்டில் அதிமுக சிறப்பாக ஆட்சி புரிந்தது. ஆகவே எடப்பாடி அவர்கள் தலைமை ஏற்றால்தான் அதிமுக வெற்றி அடையும். ஜெ பதவிவிலகும்போது OPS அவர்கள் சசிகலாவால் டம்மி ஆக முதல்வர் ஆக்கப்பட்டார். ஆகவே அவருக்கு ஆளுமை திறமை கிடையாது. அவரால் கட்சியையும் தொண்டர்களையும் வழிநடத்த முடியாது. EPS IS RIGHT CHOICE
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய பணத்தின் நேர்மையில் சந்தேகம் : ப.சிதம்பரம் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்
செவ்வாய் 30, மே 2023 5:15:03 PM (IST)

திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம் : பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
ஞாயிறு 28, மே 2023 9:15:02 AM (IST)

ஜல்லிக்கட்டு வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்!!
செவ்வாய் 23, மே 2023 12:30:22 PM (IST)

கர்நாடக மக்களுக்கு நாடே நன்றி சொல்கிறது: ப.சிதம்பரம் கருத்து
சனி 13, மே 2023 4:48:52 PM (IST)

புதிய தேர்வு வாரியம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
வெள்ளி 5, மே 2023 12:14:37 PM (IST)

மதுவுக்கு அனுமதி அளிக்கும் அரசாணைகளை திரும்பப்பெற வேண்டும்: அன்புமணி
செவ்வாய் 25, ஏப்ரல் 2023 11:12:03 AM (IST)

YESIJun 26, 2022 - 01:54:52 PM | Posted IP 162.1*****