» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் மகன் திடீர் சந்திப்பு : அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக பாராட்டு

வியாழன் 19, மே 2022 11:14:22 AM (IST)தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலனில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார் என்று ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்  எம்.பி. பாராட்டியுள்ளார். 

சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், தேனி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.யுமான ரவீந்திரநாத் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழக மக்கள் நலனில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தங்களுக்கும், தங்கள் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வரும் சுகாதாரத் துறைக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கான கூடுதல் தேவைகளைப் பற்றி நான் கேட்டறிந்தேன். 

அங்குள்ள மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை பற்றிய விபரத்தை இந்தக் கடிதத்துடன் இணைத்து கொடுத்துள்ளேன். அந்த மருத்துவமனைக்கு அவர்களின் நியமனம் உடனடி தேவையாக உள்ளது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு அந்த மருத்துவமனைக்கான அடிப்படை தேவைகளை விரைவாக நிறைவேற்றித் தர வேண்டும். நோயாளிகளின் விபரங்களை பதிவு செய்ய 15 கம்ப்யூட்டர்கள், உணவு கொண்டு செல்லும் வண்டிகள், புதிய ஆம்புலன்ஸ்கள் மற்றும் பல உபகரணங்கள் அங்கு அளிக்கப்பட வேண்டும். லேப் டெக்னீஷியன், ரேடியாலஜி படித்த டாக்டர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர், மருந்தக பணியாளர்களை அங்கு கூடுதலாக பணியமர்த்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

MADURAI MAKKALமே 21, 2022 - 02:40:37 PM | Posted IP 162.1*****

தமிழ்நாட்டிற்கு பயன்படாத பாராளுமன்ற உறுப்பினர் இவரால் தமிநாட்டுக்கும் ADMK க்கும் ஒரு பிரயோஜனமும் இல்லை.

ஆமாம்மே 19, 2022 - 09:00:41 PM | Posted IP 162.1*****

திமுகவும் அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய இரண்டு மட்டைகள்

தமிழன்மே 19, 2022 - 06:51:21 PM | Posted IP 162.1*****

இதில் எந்த தவறும் இல்லை. ஒரு தொகுதியின் வளர்ச்சி என்பது ஒரு மாநிலத்தின் வளர்ச்சி ஒரு நாட்டின் வளர்ச்சியாகும்.ஆளும்கட்சியின் பல நல்ல திட்டங்களை எதிர் கட்சிகள் ஆதரிக்க வேண்டும் அப்போதுதான் ஒரு நாடு முன்னேற முடியும்.எதிர் கட்சிகள் எதிர்கட்சியாக இருக்கவேண்டும் எதிரி கட்சியாக இருக்க கூடாது.இதை மத்திய மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

JAY RASIGANமே 19, 2022 - 03:52:00 PM | Posted IP 162.1*****

பதவி கொடுத்தால் எந்த கட்சிக்கும் தாவி விடுவார் டயர் நக்கி. அவர் ADMK வில் இருந்தால் அந்த கட்சி வளராது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital

Thoothukudi Business Directory