» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.10,000-ஆக உயர்த்தி வழங்குக: மநீம வலியுறுத்தல்
சனி 16, ஏப்ரல் 2022 3:39:33 PM (IST)
மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தடையானது ஜுன் 14ம் தேதி வரை அமலில் இருக்கும். தடைக் காலம் என்பதால் படகுகளை சீரமைக்கும் பணியை மீனவர்கள் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய தமிழகத்தின் 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு நடப்பாண்டு மீன் பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்தப்படும் என மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வினை கருத்தில் கொண்டு மீனவர்களுக்குக் கூடுதலாக நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மீனவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "மீன் பிடித் தடைக்காலம் தொடங்கிவிட்டது. அடுத்த 61 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாது. மீனவர்களுக்கான நிவாரண தொகையை ரூ.10,000/- ஆக உயர்த்தி, தாமதமின்றி வழங்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்" என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய பணத்தின் நேர்மையில் சந்தேகம் : ப.சிதம்பரம் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்
செவ்வாய் 30, மே 2023 5:15:03 PM (IST)

திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம் : பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
ஞாயிறு 28, மே 2023 9:15:02 AM (IST)

ஜல்லிக்கட்டு வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்!!
செவ்வாய் 23, மே 2023 12:30:22 PM (IST)

கர்நாடக மக்களுக்கு நாடே நன்றி சொல்கிறது: ப.சிதம்பரம் கருத்து
சனி 13, மே 2023 4:48:52 PM (IST)

புதிய தேர்வு வாரியம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
வெள்ளி 5, மே 2023 12:14:37 PM (IST)

மதுவுக்கு அனுமதி அளிக்கும் அரசாணைகளை திரும்பப்பெற வேண்டும்: அன்புமணி
செவ்வாய் 25, ஏப்ரல் 2023 11:12:03 AM (IST)

மீன் வியாபாரிApr 19, 2022 - 03:39:50 PM | Posted IP 108.1*****