» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

அரசியலில் இருந்து விரட்ட முடியாது, மக்கள் நம்பிக்கை நிச்சயம் வெற்றி பெறும் : சசிகலா

செவ்வாய் 12, ஏப்ரல் 2022 5:17:00 PM (IST)

தமிழக மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அது நிச்சயம் வெற்றி பெறும் என என்று சசிகலா தெரிவித்துள்ளார். 

சேலத்தில் சசிகலா இரண்டாவது நாள் ஆன்மிகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். சேலம் தாரமங்கலம் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இங்கு ஏராளமான தொண்டர்கள் சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு சசிகலா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது, கொங்குமண்டல மக்கள் அன்பாக உபசரித்தார்கள். இது மன மகிழ்ச்சியை தருகிறது.

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் குறித்த கேள்விக்கு, ஒருவர் அரசியலில் இருப்பதும் இல்லாமல் போவதும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவு. தனி ஒரு மனிதராக யாரும் சொல்ல முடியாது. அதனால் தமிழக மக்களும், கழகத் தொண்டர்களும் யாரை விரும்புகிறார்களோ, அவர்களை அரசியலில் இருந்து யாராலும் விரட்ட முடியாது. மேலும் தமிழகத்தில் அதிமுக தொண்டர்கள் பெரும் ஆதரவு எனக்கு உள்ளது. தமிழக மக்களும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் அது நிச்சயம் வெற்றி பெறும் எனவும் பேசினார்.


மக்கள் கருத்து

MGR ரசிகன்Apr 15, 2022 - 10:22:01 AM | Posted IP 173.2*****

மக்களுக்கு பணியாற்ற நீங்கள் என்ன சாதித்தீர்கள். ஜெ அவர்களுடைய பெயருக்கு களங்கம் விளைவித்தது உங்கள் group.டயர் நக்கியயும் நீங்கள் சேர்த்து கொள்ளுங்கள். உங்கள் group விலகிவிட்டால் கண்டிப்பாக அதிமுக EPS தலைமையில் ஆட்சியை பிடிக்கும்.

கடவுளுக்கு தெரியும்Apr 14, 2022 - 04:59:59 PM | Posted IP 173.2*****

திருட்டு குடும்பம்

தமிழன்Apr 13, 2022 - 06:51:19 PM | Posted IP 108.1*****

கண் கெட்ட பின்னும் சூரிய நமஸ்காரம் செய்கிறார் !

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory