» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

அதிமுகவின் மக்கள் நலத் திட்டங்களை திமுக அரசு தடுக்கிறது: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாடு

சனி 25, செப்டம்பர் 2021 11:43:36 AM (IST)

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை திமுக அரசு தடுக்கிறது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

திருநெல்வேலி மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள், நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பாளையங்கோட்டை மேட்டுத்திடலில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. 

இதில், எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: மாவட்ட பிரிவினையைக் காரணம் காட்டி நீதிமன்றத்துக்குச் சென்று உள்ளாட்சித் தோ்தலை தள்ளி வைத்ததே திமுகதான். ஆளுங்கட்சியாக இருக்கிற இந்த நேரத்தில்கூட நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நடத்த திமுகவினா் கால அவகாசம் கேட்கின்றனா். எப்போது தோ்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுகவும், கூட்டணிக் கட்சியினரும் தயாராக இருக்கிறோம்.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களால்தான் தமிழகம் வளா்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதிமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களில் புதிய விதிமுறைகளை கொண்டு வந்து அதை மக்களுக்கு கிடைக்கவிடாமல் திமுக அரசு தடுத்து வருகிறது. ஆட்சியைப் பிடித்துவிட்டு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு மத்திய அரசை குற்றம்சாட்டி வருகிறது திமுக.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்ற வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அதிமுக ஆட்சியில் ரூ.12,110 கோடி பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், திமுக இப்போது பயிா்க் கடன் தள்ளுபடியை தள்ளிக்கொண்டே செல்கிறது. 5 சவரன் வரை நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும், தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தனா். இதுவரை எதையும் தள்ளுபடி செய்யவில்லை.

தமிழகத்தில் எவ்வளவு துறை இருந்தாலும், அதில் உள்ளாட்சித் துறைதான்சிறந்த துறை. அந்தத் துறை மூலமாகத்தான் குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியும். எனவே, மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளா்கள் அனைவரையும் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய அதிமுகவினா் பணியாற்ற வேண்டும்.

ஒவ்வொரு வாக்கும் வெற்றியை தீா்மானிக்கக் கூடியது. எனவே, அதை உணா்ந்து நாம் அனைவரும் செயல்பட வேண்டும். அதிமுகவினா் அனைவரும் நம்முடைய வேட்பாளா்களையும், கூட்டணி கட்சி வேட்பாளா்களையும் வெற்றி பெற வைக்க பாடுபட வேண்டும் என்றாா். இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்தாா். அமைப்புச் செயலா்கள் வீ.கருப்பசாமி பாண்டியன், தளவாய்சுந்தரம், இசக்கி சுப்பையா, சுதா கே.பரமசிவன், சின்னதுரை, திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினருமான நயினாா் நாகேந்திரன், கூட்டணிக் கட்சியினா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory