» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

டி.டி.வி. தினகரனும், சசிகலாவும் அ.தி.மு.க.வை மீட்டெடுப்பார்களா? ஜெயக்குமார் கிண்டல்

புதன் 28, ஜூலை 2021 5:12:33 PM (IST)

டி.டி.வி. தினகரனும், சசிகலாவும் அ.தி.மு.க.வுக்கு தொடர்பில்லாதவர்கள். கட்சியை மீட்டு எடுப்பதெல்லாம் நடக்குமா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் அவரவர் வீடுகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசு சொன்னதை இதுநாள்வரை செய்யவில்லை . பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ஐந்து ரூபாயும் டீசல் விலை 4 ரூபாய் குறைக்கப்படும் என்று சொன்னதை இதுவரை அரசு நிறைவேற்றவில்லை.

வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி இதுநாள் வரை நிறைவேற்றப்படவில்லை. டி.டி.வி.தினகரன் நேற்று அ.தி.மு.க.வை மீட்டெடுப்பதற்கான பணிகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடர்ந்து செய்யும் என்று சொல்லி இருந்தது குறித்து நிருபர்கள் கேட்டபோது, டி.டி.வி. தினகரனும், சசிகலாவும் அ.தி.மு.க.வுக்கு தொடர்பில்லாதவர்கள். கட்சியை மீட்டு எடுப்பதெல்லாம் நடக்குமா? கூரையேறி கோழி பிடிக்க தெரியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்படுவதெல்லாம் நடக்கவே நடக்காது" என்றார்.


மக்கள் கருத்து

TAMIL PEOPLEJul 29, 2021 - 03:40:56 PM | Posted IP 162.1*****

EDAPPADI PALANISAMY, C.VIJAYA BASKAR, PANDIARAJAN and you (JAYAKUMAR) are the Good administrative leaders for the AIADMK. The two (கட்சிக்கு தொடர்பில்லாதவர்கள்) is not fit for AIADMK.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory