» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

கரோனா காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதில்

புதன் 17, மார்ச் 2021 5:17:03 PM (IST)

தமிழகம் முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? என்பது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு பதிலளித்துள்ளார்.

சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று தேர்தல் ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து சத்ய பிரத சாஹு விளக்கம் அளித்தார். அப்போது, கரோனா பரவல் அதிகரித்து வருவதால், தேர்தல் ஒத்திவைக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சத்ய பிரத சாஹு,  கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. பிகாரில் கரோனா தொற்று பரவல் இருந்த காலத்தில்தான் பேரவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது என்றும், பிகாரில் பேரவைத் தேர்தல் நடந்த போது இருந்த கரோனா பாதிப்பு அளவுக்கு தற்போது தமிழகத்தில் இல்லை என்றும் அவர் கூறினார்.

பிகாரில் பேரவைத் தேர்தல் நடந்த போது, சுமார் 12 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். வாக்காளர்களுக்கு நத்தம் விசுவநாதன் பணம் கொடுத்தது பற்றிய கேள்விக்கு, இந்த சம்பவம் குறித்து  மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டிருப்பதாக சத்ய பிரத சாஹு பதிலளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Thalir Products


Nalam Pasumaiyagam


Black Forest Cakes




Thoothukudi Business Directory