» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

சட்டமன்றம் நடந்தால்தான், மக்களின் அச்சத்தை போக‌்க முடியும்: மு.க.ஸ்டாலின் கேள்விக்கு முதல்வர் பதில்!!

வெள்ளி 20, மார்ச் 2020 4:27:50 PM (IST)

சட்டமன்றம் நடந்து கொண்டு இருந்தால்தான் பொது மக்களின் அச்ச உணர்வை போக்க முடியும் என முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் பேசும் போது, கேரளாவை போன்று, ரேஷன் பொருட்களை வீட்டிற்கே நேரில் சென்று வழங்க வேண்டும். ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெற இருந்த சட்டசபை, முன்கூட்டியே முடிக்கப்படுகிறதா? எல்லோரையும் தனிமைப்படுத்த சொல்லி விட்டு, நாம் கூட்டமாக அமர்ந்து பேசலாமா?  அமைச்சர் ஒருவர் தனது வீட்டின் முன்பு யாரும் வரவேண்டாம் என பலகை வைத்துள்ளார். அமைச்சருக்கே கரோனா அச்சம் உள்ள போது, நாம் ஒன்று கூடி விவாதிப்பது சரியா? என மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி "எதிர்க்கட்சி தலைவர்கள் பேரவையை ஒத்திவைக்க வலியுறுத்துகின்றனர். சட்டமன்றம் கூடினால் தான் நிலைமையை மக்களுக்கு தெளிவுபடுத்த முடியும். இங்குதான் மக்கள் பிரச்னைபற்றி பேச முடியும். சட்டமன்றத்தில் கூடியிருந்தால் நோய்த்தொற்று ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை. சட்டமன்றம் நடந்துகொண்டு இருந்தால்தான், மக்களின் அச்ச உணர்வை போக்க முடியும். என  முதலமைச்சர் பழனிசாமி கூறினார். சட்டப் பேரவையை ஒத்திவைக்கக் கோருவது பீதியை ஏற்படுத்த அல்ல; இந்த நேரத்தில் எம்.எல்.ஏ.க்கள் தொகுதியில் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே என எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் பதில் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications




Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory