» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு

வியாழன் 28, ஜூன் 2018 4:41:40 PM (IST)

உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு தொடர்பான சட்டத்திருத்த மசோதா, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. 

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிவடைந்த பிறகும், தேர்தல் நடத்தப்படாததால் உள்ளாட்சிகளை நிர்வகிப்பதற்காக தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். வார்டு வரையறை தொடர்பான பணிகள் முடிவடையாததால் தேர்தல் தொடர்ந்து தாமதம் ஆகிவருகிறது. இதனால் தனி அலுவலர்களின் பதவிக்காலமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ளது. எனவே, அவர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா, சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.  மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். அதில், வார்டு வரையறை பணிகள் இன்னும் முடிவடையாததால், பதவிக்காலம்  நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது, சட்டத் திருத்தத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  எனினும் சபையில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு இருந்ததால், குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.  இதன்மூலம் உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலம் 4-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

CSC Computer Education

New Shape Tailors



Anbu Communications

Joseph Marketing


Black Forest Cakes



Thoothukudi Business Directory