» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

கர்நாடக தேர்தல் முடிந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டார்கள் : சீமான் பேட்டி

சனி 14, ஏப்ரல் 2018 11:17:40 AM (IST)

கர்நாடகத்தில் தேர்தல் முடிந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

திருச்சி விமான நிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை வந்த பிரதமரிடம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக முதல்வர் மனு அளித்துள்ளார். ஆனால், அந்த மனுவுக்கு பிரதமர் எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களும், பிரதமர் வருகைக்கு எதிரான போராட்டங்கள் தெரிந்திருந்தும் பிரதமர் எந்த பதிலும் தெரிவிக்காமல் இருப்பது தமிழகத்தை அவமதிக்கும் செயலாகும்.

கர்நாடகத்தில் தேர்தல் முடிந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டார்கள். அப்படி எந்த வாக்குறுதியும் கர்நாடகத்தில் உள்ள கட்சியினரோ, மத்தியில் ஆளும் கட்சியோ தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்கள் கூறுவதால் காவிரி வந்துவிடாது. போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை கைது செய்வது, தாக்குதல் நடத்துவது, சிறையில் அடைப்பது தொடர்ந்து வருகிறது. நமது மண் வளத்தையும், நாட்டின் நலத்தையும் காக்க போராடும் நபர்கள் தேசத் துரோகிகளாக சித்தரிக்கப்படுகின்றனர் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Anbu Communications

Joseph Marketing

Black Forest Cakes

New Shape Tailors

Nalam Pasumaiyagam


CSC Computer Education




Thoothukudi Business Directory