» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப் படை சார்பாக உலகச் சுற்றுச்சூழல் தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.
விழாவின் தொடக்கமாக, பள்ளியின் பசுமைப் படை மாணவ, மாணவிகள் இணைந்து பள்ளி வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் பயன்தரும் புதிய மரக்கன்றுகளை நட்டனர். தொடர்ந்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் பள்ளி வளாகத்தைச் சுற்றி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் இயற்கை வளங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை ஏந்திச் சென்றனர். முன்னதாக, காலையில் நடைபெற்ற பள்ளி பொது வழிபாட்டுக் கூட்டத்தின் போது (Morning Assembly), தமிழக அரசு வழங்கிய அதிகாரப்பூர்வச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழியைப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இணைந்து மிகக் கறாராக எடுத்துக்கொண்டனர்.
இவ்விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜேசு அந்தோணி, பொறுப்பாசிரியர் ராஜ்குமார் சாமுவேல் மற்றும் ஆசிரியை சுகவதி உள்ளிட்ட ஆசிரியப் பெருமக்களும், தேசிய பசுமைப் படையைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

காமநாயக்கன்பட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
வெள்ளி 1, மே 2026 8:21:17 PM (IST)

