» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
எட்டையபுரம் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:14:04 AM (IST)

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்க பள்ளியில் 35 ஆண்டுகள் ஆசிரியர் முதல் தலைமை ஆசிரியர் வரை பணிபுரிந்த லால் பகதூர் கென்னடிக்கு பணி நிறைவு பாராட்டு விழாவும்,பள்ளி ஆண்டு விழாவும் பள்ளி வளாகத்தில் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.எட்டயபுரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயண, மேனாள் வருவாய் துறை அலுவலர் பொன்.பரமானந்தம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில்,பள்ளி தாளாளர் சுபாஷ்பாபு சிங்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டவுன் பஞ்.துணைத் தலைவர் கதிர்வேல் அனைவரையும் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை சொர்ணலதா ஆண்டறிக்கை வசித்தார். மாநில பள்ளி கல்வித்துறை தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ் ,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் லால் பகதூர் கென்னடிக்கு நினைவுப் பரிசு வழங்கி பணி நிறைவு பாராட்டு தெரிவித்தனர். கலை இலக்கிய போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் வட்டார கல்வி அலுவலர்கள் சங்கீதா,ராமசுப்பிரமணியன்,பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ரவீந்திரன்,லட்சுமியம்மாள்,செல்வகுமார்,டவுன் பஞ்சாயத்து உறுப்பினர்கள் தங்கம்மாள் கல்லடி வீரன், ராமர், ஜெயலட்சுமி, மணிகண்டன்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட நிர்வாகிகள் செல்வராஜ்,கலை உடையார் உள்பட பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள்,பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் லால் பகதூர் கென்னடி ஏற்புரை வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் அகமது ஜலால் பைஜி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

