» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணிநிறைவு பாராட்டு விழா
திங்கள் 27, ஏப்ரல் 2026 8:38:16 PM (IST)

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த ஜெயலதாவிற்கு பணி நிறைவு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது .
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் முதல் தலைமையாசிரியர் வரை 38 ஆண்டுகள் பணிபுரிந்த ஜெயலதாவிற்கு பணி நிறைவு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி தலைமை வகித்தார்.மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்க கல்வி) பாஸ்கரன், (இடைநிலை கல்வி)ஜான் பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உதவி தலைமை ஆசிரியை உஷா ஜோஸ்பின் அனைவரையும் வரவேற்றார். மாநில தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் ஜெயலதாவுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.
இதில் விருதுநகர் மாவட்ட தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் சுப்புராஜ், கோவில்பட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் ராஜ்குமார், முத்து முருகன், கண்ணன், ரவி மாணிக்கம்,ஆசியா பார்ம்ஸ் பாபு, முன்னாள் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள்,ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள், பள்ளி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

