» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
ஆர்சி பாத்திமா உயர் நிலைப் பள்ளியில் கோள் திருவிழா
வெள்ளி 15, மார்ச் 2024 10:19:40 AM (IST)
கயத்தாறு ஆர்.சி., பாத்திமா உயர் நிலைப் பள்ளியில் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்தநாள்விழா மற்றும் கோள் திருவிழா நடைபெற்றது.
கயத்தாறு ஆர் சி பாத்திமா உயர் நிலைப் பள்ளியில் தமிழ் நாடு அஸ்ட்ரோனமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் இன்று மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்திட சார்பு கோட்பாடு தந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்தநாள் முன்னிட்டு அவர் முகமூடி அணிந்து அவரது கோட்பாடுகள் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூர்ந்தார்கள்
தலைமையாசிரியர் ஆக்னல் ராஜ் தலைமை தாங்கி வாழ்த்துரைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி கோள்கள் திருவிழா விழா அஸ்ட்ரோனமி ஒலிம்பியாட் பற்றி கூறி பங்கேற்க அழைத்தார் ஆர் சி பாத்திமா அஸ்ட்ரோ க்ளப் ஒருங்கிணைப்பாளர் வாலண்டைன் துரை ஒருங்கிணைத்தார்.