» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் நவீன அறிவியல் கண்காட்சி!
வியாழன் 14, மார்ச் 2024 3:18:31 PM (IST)
நாசரேத் மர்காஷிஸ்மேல்நிலைப்பள்ளியில் நவீன அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.
தொழிற்கல்வி ஆசிரியர் ஜெய்சன் பாபு ஆரம்ப ஜெபம் செய்தார். உதவி தலைமையாசிரியர் சார்லஸ் திரவியம் ரிப்பன் வெட்டி கண்காட்சியை துவக்கி வைத்தார். மாணவர்கள் பல்வேறு நவீன அறிவியல் சார்ந்த இயங்கும் உபகரணங்களை யும்,பொருட்களையும் காட் சிப்படுத்தினர்.
குறிப்பாக, லேசர் ஒளிக்கற்றை இயந் திரம்,நீர்மதிறனில் இயங் கும் ஜாக்கிகள், ரோபோட் மாதிரிகள்,சீஸ்மிக் டிடெக்டர் எனப்படும் நில அதிர்வு உணர்வு கருவி,மின் கலனி லிருந்து மின்னோட்டம் பாயும் தொழில்நுட்ப மாதிரி கருவி, சூரிய மற்றும் பசுமை வீடுகள், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நீர் சுத்திகரிப்பான், பாஸ்கல் விதியில் இயங் கும் நீரியல் தூக்கிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி யில் பயிலும் மாணவர்க ளும், திருக்களூர் அருகே உள்ள தேமான்குளம் நடு நிலைப்பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர்களும், கண்காட்சியை பார்வை யிட்டனர்.
பார்வையாளர்க ளுக்கு மாணவர்கள் தாங் கள் காட்சிப்படுத்திய உப கரணங்களின் செயல்பாடு களை விளக்கி கூறினர். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் மாணவர்களுக்கு, நவீன அறிவியலின் முக்கியத்து வம் குறித்தும், விண்வெளி ஆராய்ச்சி குறித்தும், இஸ் ரோ புதிதாக நிறுவியுள்ள குலசேகரப்பட்டினம் ராக் கெட் ஏவுதளம் குறித்தும், அதன் பயன்கள் மற்றும் எதிர்கால நன்மைகள் குறித்தும் விளக்கி கூறினார்.
அறிவியல் ஆசிரியர் ஜென்னிங்ஸ் காமராஜ், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர் தனபால், ஓவியக்கலை ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர், நிர்வாகப் பிரிவு ஆசிரியர்கள் மேஷாக் மற்றும் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.கண்காட்சியில் பங்குபெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் சுதாகர் மற்றும் தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.