» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
எட்டயபுரம் பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தின விழா
புதன் 13, மார்ச் 2024 4:25:11 PM (IST)
எட்டயபுரம், பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம், பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெகனிக் கல்லூரியில் மகளிர் தின விழா முதல்வா க.பேபிலதா தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவில் அனைத்து துறைத்தலைவர்கள், விரிவுரையாளாகள், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள், அனைத்து துறை மாணவிகள் கலந்து கொண்டனர். மூன்றாமாண்டு மாணவி வரவேற்புரை வழங்கினார்.
விழாவில் முதல்வர் தலைமை உரையாற்றி சிறப்பித்ததோடு பெண் விரிவுரையாளர்கள், அலுவலக பணியார்களுக்கு நினைவு பரிசு வழங்கியதோடு மாணவிகளுக்கும் நினைவு பரிசினை வழங்கினார். விழாவில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றதோடு ஆடை தொழில்நுட்பவியல் மாணவிகள் நடத்திய பேஷன் ஷோ மற்றும் மாணவிகள் தாங்களே உருவாக்கிய ஆடை அணிகலன்களின் கண்காட்சியும் இடம் பெற்றது.
விழா நிகழ்ச்சிகளை மூன்றாமாண்டு மாணவிகள் தொகுத்து வழங்கினர். இறுதியாக விழா ஏற்பாடுகளை செய்த ஆங்கில விரிவுரையாளர் வெ.ஜெயசுதா நன்றியுரை வழங்கினார்.