» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் புள்ளிவிவர பகுப்பாய்வு பயிற்சி!
புதன் 27, செப்டம்பர் 2023 5:29:37 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மென்பொருளைப் பயன்படுத்தி கணக்கீட்டு புள்ளியியல்" என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பில் "எஸ்.பி.எஸ்.எஸ் மற்றும் ஆர் மென்பொருளைப் பயன்படுத்தி கணக்கீட்டு புள்ளியியல்" என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி 26-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இப்பயிற்சியின் நோக்கம் தூத்துக்குடி மண்டலத்தில் உள்ள பல கல்லூரிகளைச் சேர்ந்த இளங்கலை முதுகலை மற்றும் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு அவர்களின் ஆராய்ச்சிக்கான புள்ளியியல் கருவிகள் மற்றும் தரவு பகுப்பாய்வு மென்பொருள் பற்றிய அடிப்படை புரிதலை வழங்குவதாகும்.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் அகிலன் நிகழ்ச்சியைத் ப. தொடங்கி வைத்து பயிலரங்கின் தேவைகள் மற்றும் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பேராசிரியர் மற்றும் தலைவர், ந.வ.சுஜாத்குமார் பயிலரங்கை ஒருங்கிணைத்தார். பயிற்சி வகுப்பில், கோ.அருள் ஒளி, பூ. மணிகண்டன் மற்றும் வெ.கோமதி மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, ஆகியோர் பயிற்சி முழுவதும் விரிவுரைகளை வழங்கினர்.
ஆர்-ஸ்டுடியோ, எஸ்.பி.எஸ்.எஸ் மற்றும் அமோஸ் பகுப்பாய்வு மென்பொருள் ஆகியவற்றைப் பயன்படுத்தி புள்ளிவிவர பகுப்பாய்வின் பல்வேறு அம்சங்கள் குறித்த நேரடி அமர்வுகள் வழங்கப்பட்டன. கோவில்பட்டி ஜி.வி.என் (தன்னாட்சி), தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் (தன்னாட்சி) கல்லூரியின் இளநிலை மற்றும் முனைவர் பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரியில் ரீட்ஸ் செயல்முறை விளக்க நிகழ்ச்சி!
வியாழன் 7, டிசம்பர் 2023 5:06:12 PM (IST)

மர்காஷிஸ் பள்ளியில் தமிழக அரசின் இலவச மிதி வண்டிகள் வழங்கும் விழா!
புதன் 6, டிசம்பர் 2023 7:43:03 PM (IST)

நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
புதன் 6, டிசம்பர் 2023 7:39:53 PM (IST)

மூக்குப்பீறி பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்!
வியாழன் 30, நவம்பர் 2023 4:20:07 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு முகாம்
புதன் 29, நவம்பர் 2023 5:08:30 PM (IST)

மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி: சாத்தான்குளம் பள்ளி மாணவன் சிறப்பிடம்! .
சனி 25, நவம்பர் 2023 8:33:49 PM (IST)
