» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் தொழில்முனைவோர் பயிற்சி பட்டறை!
புதன் 27, செப்டம்பர் 2023 4:36:39 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் தொழில்முனைவோர் பயிற்சி பட்டறை கருத்தரங்கம் நடைபெற்றது.
பிள்ளையன்மனை நாசரேத் மர்கா ஷிஸ் கல்லூரியில் சென்னை புத்தாக்க நிறுவன மைய அலுவலக தொழில் முனைவோர் குழு மற்றும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறை கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜவஹர் சாமுவேல் தலைமை வகித்தார்.
நிதியாளர் பேரா.சுரேஷ் ஆபிரகாம் பிரதாப் முன்னிலை வகித்தார். வணிகவியல் பேராசிரியர் ஷைலின் ஆரம்ப ஜெபம் செய்தார். மூன்றாமாண்டு இளங்கலை வணிகவியல் மாணவி இசக்கி பிரியா வரவேற்புரை ஆற்றினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொழில் முனைவோருக்கான கள ஒருங்கிணைப்பாளர் சுவைதரன் தொடக்க தொழில் முனைவோருக்கான நிதி வாய்ப்புகள் பற்றி சிறப்புரை ஆற்றினார்
இதில் 121 மாணவ, மாணவியர் பங்கு பெற்று பயனடைந்தனர். மூன்றாமாண்டு இளங்கலை வணிகவியல் மாணவி நவிதா நன்றி கூறினார். வணிகவியல் துறை சார்பாக கல்லூரி வளாகத்தில் பனங்கிழங்கு விதை நடப்பட்டது. ஏற்பாடுகளை வணிகவியல் துறை மற்றும் தொழில் முனைவோர் ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் பாண்டியன், துணை ஒருங்கிணைப்பாளர் இம்மானுவேல் நல்லதம்பி, ஞானசுமதி, வணிகவியல் துறைத் தலைவர் சாந்தி சலோமி மற்றும் துறைப் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். இதை கல்லூரி செயலர் பிரேம்குமார் ராஜசிங் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெடரிக் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 3:59:43 PM (IST)

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா
செவ்வாய் 27, ஜனவரி 2026 3:23:21 PM (IST)

ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பிய பள்ளி மாணவ, மாணவிகள்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:32:56 PM (IST)

சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சர்வ சமய வழிபாடு
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:54:04 AM (IST)

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)


