» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

அரசு மகளிர் பள்ளியில் ரூ.1.83 கோடியில் புதுப்பித்தல் பணிகள் பூமிபூஜையுடன் தொடக்கம்!

வியாழன் 21, செப்டம்பர் 2023 3:03:31 PM (IST)



கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் தகைசால் பள்ளி திட்டத்தின் கீழ் ரூ1.83 கோடி மதிப்பில் கட்டிடம் புதுப்பித்தல் பணிக்கான பூமி பூஜை பள்ளி வளாகத்தில் நடந்தது.

தமிழக அரசின் தகை சால் பள்ளி திட்டத்தின் கீழ் 1.83 கோடி மதிப்பில் தமிழக காவலர் வீட்டு வசதி கழகத்தின் சார்பில் பள்ளி கட்டிடங்கள் புதுப்பிக்கப்படுகிறது. தரைதளங்கள், மேல்தளங்கள், ஆய்வு கூடங்கள், வகுப்பறைகள், புதுப்பிக்கபடுகின்றன. இதையொட்டி பள்ளி வளாகத்தில் நடந்த பூமி பூஜை நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரெங்கம்மாள், உதவி தலைமை ஆசிரியர்கள் உஷா ஜோஸ்பின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

உதவி தலைமையாசிரியர் கண்ணன் வரவேற்றார். தமிழக காவல் வீட்டு வசதி கழக செயற்பொறியாளர் கட்டிட புதுப்பித்தல் பணியினை துவக்கி வைத்து பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் உதவி செயற்பொறியாளர் குமரேசன்,இளநிலை பொறியாளர் காட்வின்,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன்,ஒப்பந்தக்காரர் ராஜகோபால்,உதவி தலைமை ஆசிரியர் சீனிவாசன்,உடற்கல்வி இயக்குனர் காளிராஜ், உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory