» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் கண்காட்சி!

வியாழன் 14, செப்டம்பர் 2023 10:16:53 AM (IST)



நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் மன்ற துவக்க விழாவும் இயற்பியல் கண்காட்சியும் நடைபெற்றது.
      
மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர்  ஜாண்சன் பால் டேனியல் கலந்து கொண்டு துவக்கவிழா உரையாற்றி  இயற்பியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.     மேல்நிலை வகுப்புகளில் 11,12 ஆம் வகுப்பு மாணவர் கள்  இயற்பியல் சார்ந்த படைப்புகளை காட்சிப்படுத் தினர்.
      
குறிப்பாக பி.எஸ்.எல்.வி ராக்கெட், அணு உலை, சந்திராயன் 3 லேன்டர் ரோவர் போன்ற மாதிரிகள், பாஸ்கல் விதியில் இயங்கும் இயந்திரங்கள், நில நடுக்கத்தின் போது ஒலி எழுப்பும் கருவி, முப்பரிமாண 3னு ஹோலோகிராம், முழு அக எதிரொளிப்பில் தண்ணீரில் செல்லும் லேசர் ஒளி ஆகியவை மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டு விளக்கிக் கூறப்பட்டது.

மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கென்னடி வேதராஜ் சிறப்பு ரையாற்றினார். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரென் டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் கண்காட்சியை பார்வையிட் டனர்.மர்காஷிஸ் மெட்ரிக்கு லேஷன் பள்ளி மாணவ மாணவியர்களும், நாசரேத் கஸ்பா தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர்களும் கண்காட்சியை பார்வையிட் டனர்.கண்காட்சிக்கான ஏற்பாட்டினை இயற்பியல் ஆசிரியர் கெர்சோம் ஜெபராஜ் தலைமையில்  மேல்நிலை வகுப்பு மாண வர்கள் செய்திருந்தனர்.

உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், தொழிற் கல்வி ஆசிரியர்  ஜெய்சன் பாபு, உதவி தலைமையா சிரியர் சார்லஸ் திரவியம், நல்லாசிரியர் விருது பெற்ற உதவி தலைமையாசிரியர் ஜெயசீலன் சேகர் டேவிட் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். கண்காட்சியில் பங்கு பெற்ற மாணவர்களையும் ஆசிரியர்களையும், அலுவ லக பணியாளர்களையும் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி தாளாளர்  சுதாகர்  பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory