» கல்வி / வேலை » வழிகாட்டி (தூத்துக்குடி)

அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க விழிப்புணர்வு பேரணி!

வியாழன் 6, ஜூலை 2023 5:14:30 PM (IST)



தூத்துக்குடியில் அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்தும் நோக்கத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளி டி.சவேரியார்புரம், சிலுவைப்பட்டி அஞ்சல், தூத்துக்குடி -2 என்ற முகவரியில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மாணவர் சேர்வதற்கு வயது வரம்பு 12வயதிற்கு மேல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய ஏழு துறைகள் இயங்கி வருகின்றன. 

இப்பள்ளியில் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்தும் நோக்கத்தில் பொது மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியானது இசைப்பள்ளி தலைமையாசிரியர் சிவகாம செல்வி தலைமையில் நடைபெற்றது. இசைப்பள்ளி வளாகத்திலிருந்து தாளமுத்துநகர் மற்றும் மாதாநகர் வழியாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இசை கலைஞர்கள் திரளாக கலந்துக்கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory