» கல்வி / வேலை » வழிகாட்டி (தூத்துக்குடி)

டி.என்.பி.எஸ்.சி., நேர்முக தேர்வில் மாற்றம்

திங்கள் 4, டிசம்பர் 2023 5:13:36 PM (IST)

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், இன்று நடக்கவிருந்த நேர்முக தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முக தேர்வு, நவம்பர், 22 முதல் நடந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக, இந்த தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இன்று நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு, வரும், 6ம் தேதியும்; 6ம் தேதி அழைக்கப்பட்டவர்களுக்கு, 7ம் தேதியும் நேர்முக தேர்வு நடத்தப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அஜய் யாதவ் அறிவித்துள்ளார்.

அதேபோல, வட்டார கல்வி அதிகாரி பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. தமிழக பள்ளிக்கல்வி துறையில், வட்டார கல்வி அதிகாரி பணிக்கு, டி.ஆர்.பி., எனப்படும், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், போட்டி தேர்வு நடத்தி, தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

மிக்ஜாம் புயல் காரணமாக, இந்த சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory