» கல்வி / வேலை » வழிகாட்டி (தூத்துக்குடி)
மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்களுக்கு ஐஏஎஸ் தேர்வுக்கான ஆயத்த பயிற்சி : ஆட்சியர் தகவல்
வெள்ளி 24, டிசம்பர் 2021 5:04:22 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில், மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடிமைப் பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க, ஆயத்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க சென்னை அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்துடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆயத்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் WWW.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி (Guidelines) விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு வடக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது 0461-2320458 மற்றும் 9384824352 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 முடித்த பின் என்ன படிக்கலாம்? ம.சு. பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகள் - முழு பட்டியல்
திங்கள் 24, பிப்ரவரி 2025 4:35:36 PM (IST)

கடின உழைப்பும் பயிற்சியும் இருந்தால் உயர் பதவி கிடைக்கும்: அரசு செயலர் அறிவுரை
சனி 15, பிப்ரவரி 2025 5:53:57 PM (IST)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்
வியாழன் 7, நவம்பர் 2024 8:54:38 AM (IST)

நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு குறித்த பயிற்சி: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அழைப்பு
புதன் 9, அக்டோபர் 2024 5:18:05 PM (IST)

அரசு ஐடிஐகளில் நேரடி சேர்க்கை செப்.30 வரை நீட்டிப்பு : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!
வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:45:55 PM (IST)

குரூப் 2, 2ஏ தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சனி 25, மே 2024 11:45:50 AM (IST)


