» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

மத்திய அரசில் 323 தட்டச்சு, சுருக்கெழுத்தர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

புதன் 31, ஆகஸ்ட் 2022 5:00:03 PM (IST)மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எல்லை பாதுகாப்பு படையில் (பிஎஸ்எப்) காலியாக உள்ள 323 தட்டச்சு. சுருக்கெழுத்தர் பணியிடங்ளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் தகுதிக்கான விவரங்கள்:

ASI (Stenographer)

காலியிடங்கள்: 11

சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300

வயது வரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதி அதனை நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

Head Constable (Ministerial)

காலியிடங்கள்: 312

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

பிஎஸ்எப் -ஆல் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனைகள், தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சேவைக் கட்டணமாக ரூ.40 மட்டும் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.rectt.bsf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.09.2022


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory