» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
தமிழக அரசில் விளையாட்டு பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
வெள்ளி 5, ஜூலை 2024 3:28:28 PM (IST)
தமிழ்நாடு அரசின் இளைஞர்கள் விளையாட்டு மன்றத்தில் விளையாட்டு பயிற்சியாளர்கள் பணியிடங்களுக்கு ஜூலை 10க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தமிழக அரசால் நடத்தப்படும் இளைஞர்கள் விளையாட்டு மன்றத்தில் நிரப்பப்பட உள்ள விளையாட்டு பயிற்சியாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளம் பட்டதாரிகளிடம் இருந்து வரும் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். 222/2024
பதவி: Sports Coacher
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ. 30,000
வயதுவரம்பு: 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் மாவட்ட, மாநில, தேசிய அளிவிலான விளையாட்டுப் போட்டிகள் ஏதாவதொன்றில் பயிற்சியாளராக குறைந்தது ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறனும், முதலுதவி செய்யவும், உணவுக் கட்டுப்பாடு மற்றும் ஊட்டச்சத்து முறைகள் குறித்து தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnuhdb.tn.gov.in/recruitment என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பதிவு அல்லது விரைவு தபாலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 10.7.2024
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Superintending Engineer, North Circle-II, Tamil Nadu Urban Habitat Development Board, New No. 56 Old No. 140, Santhome High Road, Chennai – 600 004
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அஞ்சல்துறை வங்கியில் 348 பணி இடங்கள்: அக்.29க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 23, அக்டோபர் 2025 4:09:02 PM (IST)

7,565 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள்: எஸ்.எஸ்.சி., அறிவிப்பு!
வியாழன் 25, செப்டம்பர் 2025 12:48:27 PM (IST)

தமிழக காவல்துறையில் 3665 பணி இடங்கள் : செப்.21 வரை விண்ணப்பிக்கலாம்..!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 12:55:39 PM (IST)

ரயில்வேயில் 434 காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
புதன் 17, செப்டம்பர் 2025 12:27:25 PM (IST)

நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதன் 13, ஆகஸ்ட் 2025 3:34:18 PM (IST)

தமிழக அரசு துறைகளில் 645 இடங்கள்: ஆக.13வரை விண்ணப்பிக்கலாம்!
சனி 9, ஆகஸ்ட் 2025 4:02:04 PM (IST)



Muthu jeya Lakshmi sJul 23, 2024 - 02:42:59 PM | Posted IP 162.1*****