» சினிமா » செய்திகள்
ரஜினிக்கு கதை பிடிக்கும் வரையில் கதை கேட்டுக்கொண்டே இருப்போம்: கமல்ஹாசன் பேட்டி
சனி 15, நவம்பர் 2025 5:23:57 PM (IST)
ரஜினிக்கு கதை பிடிக்கும் வரையில் கதை கேட்டுக்கொண்டே இருப்போம் என அவரது 173 ஆவது திரைப்படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 173 ஆவது திரைப்படத்தை மூத்த இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த நவ.13 ஆம் தேதி, கனத்த இதயத்துடன் இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர் சி அறிவிப்பை வெளியிட்டார்.
இதையடுத்து, இப்படம் கைவிடப்படுகிறதா? அல்லது இளம் இயக்குநர்களின் இயக்கத்தில் உருவாக்கப்படுமா? எனும் கேள்விகள் இணையத்தில் வலம் வந்தன.இந்த நிலையில், நடிகர் ரஜினிக்கு கதை பிடிக்கும் வரையில் நாங்கள் தொடர்ந்து கதைகள் கேட்டுக்கொண்டே இருப்போம் என தயாரிப்பாளர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இதுபற்றி, செய்தியாளர்களுடன் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:"நான் முதலீட்டாளன் என்னுடைய நட்சத்திரத்துக்கு (ரஜினிகாந்த்) பிடித்த கதையை எடுப்பதுதான் எனக்கு ஆரோக்கியமானது. அவருக்கு பிடிக்கும் வரையில் நாங்கள் கதைகளைக் கேட்டுக்கொண்டே இருப்போம்” எனக் கூறியுள்ளார். இத்துடன், புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு உள்ளதா? எனும் செய்தியாளர்களின் கேள்விக்கு "வாய்ப்பு உள்ளது, கதை நன்றாக இருக்க வேண்டும்” என நடிகர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரபுதேவா-வின் 'மூன்வாக்' படத்தில் 5 பாடல்களை பாடிய ஏ.ஆர்.ரகுமான்!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:20:25 AM (IST)

நடிகை சமந்தா 2-வது திருமணம்: இயக்குநரை கரம்பிடித்தார்
திங்கள் 1, டிசம்பர் 2025 3:50:33 PM (IST)

நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சனி 29, நவம்பர் 2025 4:05:40 PM (IST)

நூறு பிறவிகள் எடுத்தாலும், ரஜினியாகவே பிறக்க விரும்புகிறேன்: ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!!
சனி 29, நவம்பர் 2025 10:38:32 AM (IST)

சபரிமலை கோவிலில் தங்கம் அபகரிப்பு வழக்கு: நடிகர் ஜெயராமை கைது செய்ய முடிவு!
வெள்ளி 28, நவம்பர் 2025 5:25:35 PM (IST)

பிரபல நடிகையுடன் கிரிக்கெட் வீரர் அனிருத்தா ஸ்ரீகாந்த் திருமணம்!
வியாழன் 27, நவம்பர் 2025 4:43:43 PM (IST)

