» சினிமா » செய்திகள்
விக்ரம் படம் டிராப்... ஃபகத் பாசிலை இயக்கும் மெய்யழகன் இயக்குநர் பிரேம் குமார்!
புதன் 10, செப்டம்பர் 2025 12:37:31 PM (IST)

விக்ரம் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்ட நிலையில், ஃபகத் பாசிலை இயக்க உள்ளதாக மெய்யழகன் பட இயக்குநர் பிரேம் குமார் தெரிவித்துள்ளார்.
‘96’ மற்றும் ‘மெய்யழகன்’ ஆகிய படங்களின் பிரம்மாண்ட வரவேற்புக்குப் பிறகு இயக்குநர் பிரேம் குமார், வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க விக்ரம் நடிக்கவுள்ள படத்தினை இயக்கவிருந்தார். இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால், இறுதிகட்ட கதை விவாதத்தின் போது விக்ரம் – பிரேம் குமார் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே அப்படம் கைவிடப்பட்டது.
இதனால் அக்கதைக்கு வேறொருவரை நாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்தார் பிரேம் குமார். அக்கதையினை ஃபகத் பாசிலை சந்தித்து கூறியிருக்கிறார் பிரேம் குமார். அவருக்கு கதை மிகவும் பிடித்துவிடவே, உடனடியாக தேதிகள் கொடுத்திருக்கிறார் ஃபகத் பாசில். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு.
தற்போது ஃபகத் பாசிலுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படம் முழுக்க த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ளது. ஃபகத் பாசில் படத்தினை முடித்துவிட்டு, அடுத்ததாக ஆக்ஷன் கதை ஒன்றும், நாயகியே இல்லாத காதல் கதை ஒன்றும் எழுதியிருப்பதாக பிரேம் குமார் தெரிவித்துள்ளார். இரண்டில் ஏதேனும் ஒன்றிணை அடுத்து இயக்கவுள்ளதாகவும் பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார் பிரேம் குமார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த்: படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 11:55:56 AM (IST)

மாஸ்ட்ரோ இளையராஜாவுடன் மாரி செல்வராஜ் புதிய கூட்டணி?
திங்கள் 25, மே 2026 5:04:55 PM (IST)

பிரேம்குமார் - பகத் பாசில் இணையும் புதிய த்ரில்லர் படம்: பூஜையுடன் தொடக்கம்!
வெள்ளி 22, மே 2026 4:51:58 PM (IST)

ஜெயிலர் 2 ரிலீஸ் தேதியை மாற்றிய சன் பிக்சர்ஸ்!
வியாழன் 21, மே 2026 5:12:31 PM (IST)

கருப்பு படத்தில் சர்ச்சை காட்சி: இளையராஜாவிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தது படக்குழு!
செவ்வாய் 19, மே 2026 4:00:36 PM (IST)

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை! - திரையுலகினர் அதிர்ச்சி!
திங்கள் 18, மே 2026 10:31:06 AM (IST)

