» சினிமா » செய்திகள்
திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்
வியாழன் 17, ஜூலை 2025 4:30:39 PM (IST)
திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரைத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் ஒளிப்பதிவாளராக தன் வாழ்க்கையை தொடங்கியவர். மேலும், இயக்குநர் மற்றும் நடிகர் என பல பரிமானங்களைக் கொண்டவர். 1989-ல் 'நாளைய மனிதன்' படத்தில் இயக்குநராக அறிமுகமாகி 'அசுரன், ராஜாளி, கடவுள், சிவன், புரட்சிக்காரன்' என பல படங்களை இயக்கியுள்ளார்.கடந்த சில நாள்களாக உடல் பாதிக்கப்பட்டிருந்த வேலு பிரபாகரன், சென்னையில் உள்ள தனியா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வேலு பிரபாகரன் இன்று (ஜூலை 17) பிற்பகல் 12.20 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டர். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த்: படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 11:55:56 AM (IST)

மாஸ்ட்ரோ இளையராஜாவுடன் மாரி செல்வராஜ் புதிய கூட்டணி?
திங்கள் 25, மே 2026 5:04:55 PM (IST)

பிரேம்குமார் - பகத் பாசில் இணையும் புதிய த்ரில்லர் படம்: பூஜையுடன் தொடக்கம்!
வெள்ளி 22, மே 2026 4:51:58 PM (IST)

ஜெயிலர் 2 ரிலீஸ் தேதியை மாற்றிய சன் பிக்சர்ஸ்!
வியாழன் 21, மே 2026 5:12:31 PM (IST)

கருப்பு படத்தில் சர்ச்சை காட்சி: இளையராஜாவிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தது படக்குழு!
செவ்வாய் 19, மே 2026 4:00:36 PM (IST)

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை! - திரையுலகினர் அதிர்ச்சி!
திங்கள் 18, மே 2026 10:31:06 AM (IST)

