» சினிமா » செய்திகள்

சந்தானம் படத்திலிருந்து கோவிந்தா பாடல் நீக்கம்!

வியாழன் 15, மே 2025 3:49:49 PM (IST)



எதிர்ப்புகள் எழுந்த நிலையில் சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் இருந்து கோவிந்தா என்ற பாடல் நீக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை திரைக்கு வர உள்ளது.

சமீபத்தில் இப்படத்திலிருந்து (கிஸ்ஸா 47) 'கோவிந்தா' என்று தொடங்கும் பாடல் வெளியானது. அந்த பாடலில் இடம் பெற்ற வரிகள் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருந்ததாக புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து, திரைப்பட தயாரிப்பாளர் மீது திருப்பதி காவல் நிலையத்தில் ஜனசேனா கட்சியினர் புகார் செய்தனர். 

மேலும், அந்த பாடலை படத்திலிருந்து நீக்கக் கோரியும், ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டும் பட நிறுவனத்திற்கும் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படக்குழுவினர் படத்தில் இருந்து (கிஸ்ஸா 47) கோவிந்தா என்ற பாடலை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer Education



Thoothukudi Business Directory