» சினிமா » செய்திகள்
ரஜினி - கமல் இணைந்து நடிக்க முயற்சி எடுத்தேன் : இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
திங்கள் 12, மே 2025 12:40:29 PM (IST)
’நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த்தை இணைந்து நடிக்க வைக்க பல முயற்சிகளை எடுத்தேன் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கூறியது: "இயக்குநர் விஜய்யுடன் அனைவரும் ‘லியோ 2’ நான் பண்ண வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், எனக்கு அவரை வைத்து ‘மாஸ்டர் 2’ எடுக்க விரும்புகிறேன். காரணம், அதில் சொல்லப்பட வேண்டிய கதை ஒன்று முழுமை பெறாமல் இருப்பது போல எனக்கு தோன்றியது. அதில் அவரை ஜேடி கதாபாத்திரத்தில் பார்ப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்ப பிடிக்கும்.
’கூலி’ படத்தைப் பொறுத்தவரை எந்த பிரஷரும் இல்லாமல் வேலை செய்கிறேன். முந்தைய படங்களில் ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டுதான் ஷூட்டிங் செல்வோம். ஆனால், இந்த படத்தில் அதை தவிர்த்து விட்டேன். முந்தைய தவறுகளை மீண்டும் செய்யக் கூடாது என்பதாலேயே இந்த முடிவு.
’ஆர்ஆர்ஆர்’ போல 3, 4 வருடங்கள் நடிகர்களை வைத்து படமெடுக்கும் சூழலில் நான் இல்லை. அதிகபட்சம் 6 முதல் 8 மாதங்கள்தான். பொதுவாக என் படத்தில் நடிகர்களிடம் கெட்-அப் மாற்றக் கூடாது, வேறு படங்களில் நடிக்கக் கூடாது என்று நான் சொல்வதில்லை.
நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த்தை இணைந்து நடிக்க வைக்க பல முயற்சிகளை எடுத்தேன். முக்கியமாக, நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் ரஜினி நாயகனாக நடிப்பது கிட்டத்தட்ட உறுதியானது. ஆனால், கரோனாவால் அத்திட்டம் கைவிடப்பட்டது. இவர்கள் இருவரையும் வயதான கேங்ஸ்டர்களாகக் காட்டும் கதையையும் வைத்திருந்தேன்.
பின், வணிகம் மற்றும் பிற காரணங்களால் இப்போது அப்படத்தை எடுப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. பார்ப்போம். நடந்தால் மிகப்பெரிய விஷயமாக இருக்கும்” என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சரித்திரங்களை இன்றைய தலைமுறையினர் அறியச் செய்ய வேண்டும்: சரத்குமார் வேண்டுகோள்!
செவ்வாய் 24, ஜூன் 2025 3:27:31 PM (IST)

ரசிகர்கள் எதிர்பார்த்த படம் தரவில்லை : மன்னிப்பு கோரிய மணிரத்னம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 11:38:27 AM (IST)

விஜய் பிறந்தநாளில் ஜன நாயகன் அப்டேட்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
வெள்ளி 20, ஜூன் 2025 8:28:02 PM (IST)

ஆர்.ஜே. பாலாஜி - சூர்யா படத்தின் டைட்டில் அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 11:02:22 AM (IST)

கூலி திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் ரூ.81 கோடிக்கு விற்பனை
புதன் 18, ஜூன் 2025 4:29:29 PM (IST)

நெல் ஜெயராமனின் மகன் படிப்பு செலவை ஏற்றுள்ள சிவகார்த்திகேயன்..!
புதன் 18, ஜூன் 2025 3:43:56 PM (IST)
