» சினிமா » செய்திகள்
இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)
"மோடி தேவையில்லை என்றார் வேறு ஒரு தலைவரின் பெயரை நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம். இன்னும் 20 ஆண்டுகள் அவர் இந்தியாவை ஆள வேண்டும்" என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "இதுவரை இந்தியாவை ஆட்சி செய்த பிரதமர்களின் பெயர்களை எழுதுங்கள். மவுண்ட் பேட்டன் காலத்தில் இருந்து அவர்கள் இந்தியாவுக்காக என்ன செய்தார்கள் என்பதையும் எழுதுங்கள். மற்றொரு பக்கம் பிரதமர் மோடிக்காக ஒரு பட்டியலை தயார் செய்யுங்கள். அப்போது வித்தியாசத்தை நீங்கள் காண்பீர்கள்.1988-ம் ஆண்டு நான் முதன்முதலில் காசிக்கு சென்றபோது அது சிறுநீர் கழிக்கும் இடம்போல காட்சியளிக்கும். ஆனால், இப்போது அது முற்றிலுமாக மாறிவிட்டது. இதை யார் செய்தது. கங்கை நதி மிகவும் சுத்தமாக நீர். அதில் மக்கள் அசுத்தங்களை செய்துகொண்டிருந்தனர்.
மோடிதான் சரியான திட்டமிடலுடன் அதனை சரி செய்தார். இன்னும் அதற்கான வேலை நடந்துகொண்டிருக்கிறது. நாட்டின் மீது பற்று இல்லாத ஒருவரால் இதை செய்யவே முடியாது. நான் முன்பே சொன்னதுபோல மற்ற பிரதமர்கள் செய்ததையும் மோடி செய்ததையும் ஒப்பிட்டு பார்த்தால் உங்களுக்கு வித்தியாசம் புரியும்.
ஒரு வேளை நமக்கு மோடி தேவையில்லை என்றால், அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு ஒரு தலைவரின் பெயரை நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம். அப்படி யாராது இருக்கிறார்களா?. இன்னும் 20 ஆண்டுகள் அவர் இந்தியாவை ஆள வேண்டும்' என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த்: படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 11:55:56 AM (IST)

மாஸ்ட்ரோ இளையராஜாவுடன் மாரி செல்வராஜ் புதிய கூட்டணி?
திங்கள் 25, மே 2026 5:04:55 PM (IST)

பிரேம்குமார் - பகத் பாசில் இணையும் புதிய த்ரில்லர் படம்: பூஜையுடன் தொடக்கம்!
வெள்ளி 22, மே 2026 4:51:58 PM (IST)

ஜெயிலர் 2 ரிலீஸ் தேதியை மாற்றிய சன் பிக்சர்ஸ்!
வியாழன் 21, மே 2026 5:12:31 PM (IST)

கருப்பு படத்தில் சர்ச்சை காட்சி: இளையராஜாவிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தது படக்குழு!
செவ்வாய் 19, மே 2026 4:00:36 PM (IST)

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை! - திரையுலகினர் அதிர்ச்சி!
திங்கள் 18, மே 2026 10:31:06 AM (IST)

