» சினிமா » செய்திகள்

மே 16-ல் இந்தியன் 2 பாடல் வெளியீட்டு விழா!

திங்கள் 29, ஏப்ரல் 2024 11:53:03 AM (IST)ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள  இந்தியன் 2  படத்தின் பாடல் வெளியீட்டு விழா, மே மாதம் 16-ம் தேதி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து1996-ம் ஆண்டு வெளியான பிரம்மாண்ட படம், ‘இந்தியன்’. அதில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதன் அடுத்த பாகம் ‘இந்தியன் 2’ என்ற பெயரில் இப்போது உருவாகி இருக்கிறது. இதில், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படம் ஜூன் 13-ம் தேதி வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.160 கோடிக்கு வாங்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு தமிழ்ப்படத்துக்குக் கிடைத்த அதிகப்பட்ச தொகை இது என்கிறார்கள். 

லைகா நிறுவனமும் ரெட் ஜெயண்ட் மூவிஸும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, மே மாதம் 16-ம் தேதி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க இருக்கிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். தெலுங்கு நடிகர் ராம் சரணும் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory