» சினிமா » செய்திகள்

நற்பணி இயக்கத்தை வலுப்படுத்தும் சூர்யா... அரசியலுக்கு வர திட்டம்?

திங்கள் 13, மே 2024 4:43:02 PM (IST)

நடிகர் சூர்யா தன் நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளாராம். இதன் மூலம் அவர் அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். இந்தக் கட்சி 2026-ல் நடக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தனது மக்கள் இயக்கம் மூலம், பல்வேறு நலத்திட்ட உதவிகளை விஜய் செய்து வந்தார்.

விஜய்யை அடுத்து விஷாலும்அரசியலில் களமிறங்க இருக்கிறார். அதை அவர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இந்நிலையில், நடிகர் சூர்யாவும் தனது நற்பணி இயக்கத்தை வலுப்படுத்துகிறார். சூர்யாவின் நற்பணி இயக்கம் 60 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது.

அந்த மாவட்டங்களிலும் வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமிப்பது குறித்து, மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. விழுப்புரம், கடலூர் கிழக்கு, தெற்கு, மேற்கு, புதுச்சேரி, மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இதில் ஒன்றியம், நகரம், பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து நடிகர் சூர்யாவும் அரசியலுக்கு வர அடித்தளமிடுவதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory