» சினிமா » செய்திகள்

சாய்பாபா கோயில் கட்டிய விஜய்: தாய் ஷோபா நெகிழ்ச்சி

வெள்ளி 12, ஏப்ரல் 2024 12:20:44 PM (IST)நடிகர் விஜய் தனது தாய் ஷோபாவுக்காக சென்னையில் சாய்பாபா கோயில் ஒன்றை கட்டியுள்ளார். 

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கோட்' திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலில் குதித்துள்ள விஜய், அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். 

சினிமா, கட்சி என அடுத்தடுத்து பிசியாக இருக்கும் விஜய் சமீபத்தில் விஜய் தனது தாய்க்காக சென்னையில் சாய்பாபா கோயில் ஒன்றை கட்டியுள்ளது தெரியவந்துள்ளது. சென்னை கொரட்டூர் வெங்கடேஷ்வரா நகரில் விஜய் கட்டிக்கொடுத்துள்ள சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 11ம் தேதி இந்த கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஆனந்த் கலந்துகொண்டார்.

சில தினங்கள் இந்தக் கோயிலில் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் தரிசனம் செய்துள்ளார். அப்போது பேசிய ஷோபா சந்திரசேகர், "ரொம்ப நாளாக ஒரு பாபா கோயிலை எங்கள் இடத்தில் கட்ட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்று கூறிக் கொண்டே இருந்தேன். அதற்கேற்ப அவரும் கட்டிக் கொடுத்து விட்டார். ஒவ்வொரு வியாழக்கிழமையும் இங்கு வந்து தரிசனம் செய்துவருகிறேன்" என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory