» சினிமா » செய்திகள்

சல்மான் கான் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் சிக்கந்தர்: 2025 ரம்ஜானுக்கு வெளியீடு!

வியாழன் 11, ஏப்ரல் 2024 4:01:22 PM (IST)மும்பை சல்மான் கான் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்துக்கு 'சிக்கந்தர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது

‘தர்பார்’ படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தை அடுத்து சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. சல்மான் கான் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்துக்கு 'சிக்கந்தர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்த சல்மான் படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டார்.

'சிக்கந்தர்' திரைப்படம் 2025ம் ஆண்டு ரம்ஜான் பண்டிகையன்று வெளியாகும் எனவும் சல்மான் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார். இதை சஜித் நாடியத்வாலா தயாரிக்கிறார். ரவிதேஜா நடித்து தெலுங்கில் ஹிட்டான படம் ‘கிக்'. இதன் இந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடித்திருந்தார். அதன் அடுத்த பாகமான ‘கிக் 2’ தான் 'சிக்கந்தர்' பெயரில் எடுக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory