» சினிமா » செய்திகள்

லியோ இசை வெளியீட்டு விழா ரத்து: தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம்!

புதன் 27, செப்டம்பர் 2023 12:14:52 PM (IST)

விஜய் நடித்துள்ள லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டதன் காரணமாக தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் நடித்துள்ள லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30-ந் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவை முதலில் மதுரையில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். மதுரை தமுக்கம் மைதானத்தில் மாநாடு போல நடத்த பிளான் போட்டனர். ஆனால் அந்த பிளான் ஒர்க் அவுட் ஆகாததால், பின்னர் மலேசியா அல்லது துபாயில் நடத்தும் முடிவுக்கு வந்தது படக்குழு.

ஆனால் அங்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து, வேறுவழியின்றி சென்னையிலேயே நடத்திவிடலாம் என்கிற முடிவுக்கு வந்தன. இதையடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 30-ந் தேதி லியோ ஆடியோ லாஞ்சை நடத்த திட்டமிட்ட படக்குழு, அதற்கான வேலைகளிலும் இறங்கியது. இந்த இசை வெளியீட்டு விழாவுக்கான செட் அமைக்கும் பணிகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் தான் நேற்று இரவு விஜய் ரசிகர்களுக்கு பேரிடியாக ஒரு செய்தி வந்தது. லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக படக்குழுவே அறிவித்தது. லியோ ஆடியோ லாஞ்சுக்கான பாஸ்கள் போலியாக அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்ததை அடுத்தே படக்குழு இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. ரசிகர்களின் நலன் கருதியே இந்த போல்டான முடிவை படக்குழு எடுத்திருந்தது.

லியோ ஆடியோ லாஞ்ச் ரத்தானது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இதற்காக கோடிக்கணக்கில் செய்த செலவுகள் குறித்து தற்போது தகவல் வெளிவந்துள்ளது. லியோ ஆடியோ லாஞ்சுக்காக நடிகர்களிடம் வீடியோ பைட்ஸ் எடுப்பது உள்ளிட்ட வேலைகள் எல்லாம் முடிந்து செட் அமைப்பது மற்றும் அரங்கத்தை தயார் செய்வது என இதற்காக மட்டும் சுமார் 2 கோடி வரை செல்வழித்து உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஆடியோ லாஞ்ச் ரத்தானதால் இவை அனைத்தும் நஷ்டமாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory