» சினிமா » செய்திகள்

ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் 170-வது படம் : லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு

வியாழன் 2, மார்ச் 2023 11:08:37 AM (IST)‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் 170-வது படத்தை தயாரிக்க உள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியிருந்தார். அதன்படி ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். 

இந்த படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக லைகா நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ரஜினியின்170-வது படத்தின் பணிகள் இனிதே ஆரம்பமாகியுள்ளன. படத்தை ‘ஜெய்பீம்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு (2024) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesNalam Pasumaiyagam
Thoothukudi Business Directory