» சினிமா » செய்திகள்

மீண்டும் காமெடியனாக களமிறங்கும் சந்தானம்!

திங்கள் 23, ஜனவரி 2023 12:05:59 PM (IST)சுந்தர்.சி இயக்க உள்ள படத்தில் நகைச்சுவை வேடத்தில் சந்தானம் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

நாயகனாக சந்தானம் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக பெரிதாக லாபமில்லை.  அதற்கு முன் வெளியான ‘சபாபதி’ படமும் சரியாக கைக்கொடுக்கவில்லை. இதனால், அவர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நகைச்சுவை பேய் படமான ‘தில்லுக்கு துட்டு’ படம்போல் மீண்டும் ஒரு பேய் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கிவருகிறார். 

இயக்குநர் சுந்தர் சியின் இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் 2014இல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. பேய்ப் படங்களுக்கென்று தனியான ரசிகர்கர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், அரண்மனை 4 குறித்து சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இதில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லைகா தயாரிப்பதாகவும் தகவல் கசிந்திருந்த வேலையில் சந்தானத்தின் பிறந்தநாளில் சுந்தர் சி, விஜய் சேதுபதி ஆகியோர் பங்கேற்றனர். 

இதனால் இந்தப் படத்தில் சந்தானம் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே, ஏகே 62 படத்தில் அஜித்துடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் சந்தானம் இனி ஹீரோவாக மட்டும் நடிக்க போவதில்லை. மீண்டும் காமெடியன் அல்லது குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory