» சினிமா » செய்திகள்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 போட்டியில அசீம் வெற்றி

திங்கள் 23, ஜனவரி 2023 11:50:54 AM (IST)பிக் பாஸ் தமிழ் சீசன் 6 போட்டியில் அசீம் வெற்றி பெற்றுள்ளார். விக்ரமன் 2வது இடமும, ஷிவின் மூன்றாவது இடமும் பிடித்தனர். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், தனலட்சுமி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டா, குயின்ஸி, ராம், சிவின், நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி.முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 

இந்த போட்டியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 6-வது முறையாக தொகுத்து வழங்கினார். 100 நாள்களை கடந்து இறுதி வாரத்தில் அஷீம், விக்ரமன், சிவின், மைனா, அமுதவாணன், கதிரவன் உள்ளிட்ட 6 பேரும் இறுதி வாரத்திற்குள் நுழைந்தனர். கதிரவன் மற்றும் அமுதவாணன் பணப்பெட்டியுடன் போட்டியிலிருந்து வெளியேறினர். மிட் வீக் எவிக்‌ஷனில் மைனா வெளியேற்றப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது. முதல்முறையாக முதல் மூன்று போட்டியாளர்களுமே இறுதி மேடைக்கு அழைத்து வரப்பட்டனர். இதில், அஷீம் முதலிடம், விக்ரமன் இரண்டாமிடம், சிவின் மூன்றாமிடம் பெற்றனர். இந்நிலையில், இறுதிப் போட்டி நிறைவடைந்த 12 மணிநேரத்தை கடந்தும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அஷீம், விக்ரமன் ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சீசன் தொடங்கியது முதலே அஷீம், விக்ரமன் மற்றும் சிவின் ஆகியோருக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் டிவிட்டரில் பதிவிட்டும், ஹேஷ் டேக்குகளை டிரெண்ட் செய்தும் வந்தனர்.அஷீம் ஆதரவாளர்கள் விக்ரமனை தாக்கியும், விக்ரமன் ஆதரவாளர்கள் அஷீமுக்கு எதிராகவும் டிவிட்டரில் நாள்தோறும் பதிவிட்டு வந்தனர். இந்த சீசனில் அஷீம் பலமுறை கோபத்தில் சக போட்டியாளர்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து பேசியதற்கு கமல் பலமுறை கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே முதல்முறையாக மக்கள் சார்பாக இந்த சீசனில் கலந்து கொண்ட மூன்றாம் பாலினத்தை சேர்ந்த சிவினுக்கு இறுதிகட்டத்தில் ஆதரவு அதிகரித்திருந்தது. கடந்த 10 நாள்களாகவே டிவிட்டரில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர் டிரெண்டிங்கில் இருந்தனர். இந்நிலையில், நேற்று அஷீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பிறகும், விக்ரமன் மற்றும் சிவினுக்கு ஆதரவாக பல்வேறு ட்வீட்கள் பதிவிடப்பட்டு வருகின்றது. கடந்த சீசன்களில் இல்லாத அளவிற்கு வெற்றியாளர் யார் என்று கணிக்க முடியாததே இத்தனை மோதல்களுக்கும் காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory