» சினிமா » செய்திகள்

நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய சட்டக் கல்லூரி மாணவர் சஸ்பெண்ட்

வெள்ளி 20, ஜனவரி 2023 4:41:35 PM (IST)

கேரளாவில் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய சட்டக் கல்லூரி மாணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி, கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். அவர் நடித்துள்ள 'தன்கம்' என்கிற மலையாள படம் ஜனவரி 26-ந் தேதி ரிலீசாக உள்ளது. சஹீத் அராபத் இயக்கியுள்ள இந்த படத்தில் வினீத் ஸ்ரீனிவாசனுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். 

இந்த படத்தின் புரமோசன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தன்கம் படத்தின் புரமோஷனுக்காக கேரளாவில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் அமர்ந்திருந்த நடிகை அபர்ணா பாலமுரளியிடம் வந்த கல்லூரி மாணவர் ஒருவர், அவருக்கு பூ கொடுத்துவிட்டு, சட்டென அவரது கையை பிடித்துள்ளார். பின்னர் அவருடன் போட்டோ எடுப்பதற்காக எழுந்தபோது அந்த மாணவர் தோள்மீது கையை போட்டதை சற்றும் விரும்பாத அபர்ணா, அவரின் பிடியில் இருந்து நழுவி மீண்டும் தனது இருக்கையில் சென்று அமர்ந்தார்.

பின்னர் மீண்டும் மேடை ஏறி வந்த அந்த மாணவர், தான் தவறாக எதுவும் நடந்துகொள்ளவில்லை. உங்களின் ரசிகனாக உங்களுடன் போட்டோ எடுக்க தான் வந்தேன் என விளக்கம் அளித்துவிட்டு, மீண்டும் அபர்ணாவுக்கு கைகொடுக்க முயன்றார். அப்போது அந்த நபருக்கு கைகொடுக்க மறுத்து விட்டார் அபர்ணா பாலமுரளி. இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சம்மந்தப்பட்ட மாணவரும், கல்லூரியின் மாணவர் பேரவையினரும் நடிகையிடம் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக சம்மந்தப்பட்ட மாணவர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், மாணவரின் விளக்கம் திருப்திகரமாக இல்லையெனில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய சட்டக் கல்லூரி மாணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவரை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து சட்டக்கல்லூரி பணியாளர் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory