» சினிமா » செய்திகள்

நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார் : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்!

வியாழன் 19, ஜனவரி 2023 11:07:04 AM (IST)

நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக உள்ள வடிவேலுவின் குடும்பத்தினர் மதுரையில் வசித்து வருகின்றனர். வடிவேலுவின் தாய் சரோஜினி (87) (எ) பாப்பா (87) வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் நேற்று (ஜன.19) இரவு சிகிச்சை பலனின்றி மதுரை விரகனூரில் மரணம் அடைந்தார். 

தாயாரின் மரணம் வடிவேலு மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், வடிவேலுவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன், அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோரும் வடிவேலுவை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesNalam PasumaiyagamThoothukudi Business Directory