» சினிமா » செய்திகள்
ஆதிபுருஷ் திரைப்படத்தின் வெளியீடு எப்போது? மீண்டும் உறுதி செய்த பிரபாஸ்
புதன் 18, ஜனவரி 2023 11:37:55 AM (IST)
தான் நடித்து வரும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை நடிகர் பிரபாஸ் மீண்டும் உறுதி செய்துள்ளார்.
பாகுபலி 2 படத்துக்குப் பிறகு சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்களில் நடித்தார் பிரபாஸ். பாகுபலி 2 படத்துக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.தன்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடிக்கிறார் பிரபாஸ்.
2021 பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கியது. ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியாகவுள்ளது. ஆதிபுருஷ் படம் 2023, ஜனவரி 12-ல் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 2022-ல் வெளியான ஆதிபுருஷ் படத்தின் டீசரின் கிராபிக்ஸ், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகளை ரசிகர்கள் விமர்சனம் செய்தார்கள்.
இதனைத் தொடர்ந்து, ஆதிபுருஷ் படத்தின் சில காட்சிகள் மீண்டும் படப்பிடிப்பு செய்து கிராபிக்ஸ் செய்யப்பட்டதை தொடர்ந்து, 2023 ஜூன் 16 வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படம் வெளியாக இன்னும் 150 நாள்களே உள்ளதாக டிவீட் செய்த பிரபாஸ் படத்தின் வெளியீட்டு தேதியை மீண்டும் உறுதி செய்துள்ளார். இந்த பதிவை தொடர்ந்து சமூக ஊடகங்களில் ஆதிபுருஷ் டிரெண்டாகி வருகின்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

21 ஆண்டுகள் கழித்து எனது கனவு நனவானது: ரஜினியை சந்தித்த சஞ்சு சாம்சன்!
திங்கள் 13, மார்ச் 2023 4:20:53 PM (IST)

லியோ படப்பிடிப்பில் இணைந்தார் சஞ்சய் தத்!
சனி 11, மார்ச் 2023 5:13:41 PM (IST)

கமல் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தை இயக்குகிறார் தேசிங்கு பெரியசாமி!
வெள்ளி 10, மார்ச் 2023 11:46:38 AM (IST)

வெற்றிமாறன் சிறந்த இயக்குநர்: இளையராஜா புகழாரம்!
வியாழன் 9, மார்ச் 2023 3:13:29 PM (IST)

ஜெயிலர் பட இயக்குநருக்கு பரிசளித்த ஜாக்கி ஷெராஃப்
புதன் 8, மார்ச் 2023 4:16:18 PM (IST)

ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் 170-வது படம் : லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு
வியாழன் 2, மார்ச் 2023 11:08:37 AM (IST)
