» சினிமா » செய்திகள்
பவர் ரேஞ்சர் புகழ் நடிகர் ஜேசன் டேவிட் ஃபிராங்க் காலமானார்
திங்கள் 21, நவம்பர் 2022 4:13:11 PM (IST)

பவர் ரேஞ்சர்ஸ் புகழ் நடிகர் ஜேசன் டேவிட் ஃபிராங்க் காலமானார். அவருக்கு வயது 49.
அமெரிக்காவில் 1973-ல் பிறந்தவர் ஃபிராங்க். 1993 முதல் 1996 வரை மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ் தொலைக்காட்சித் தொடரில் கிரீன் பவர் ரேஞ்சர் டாமி ஆலிவராக நடித்தார் ஃபிராங்க். இந்தத் தொடர் இளைஞர்களிடம் மிகவும் புகழ்பெற்றது. முதலில் கிரீன் ரேஞ்சராக நடித்தார் ஃபிராங்க். இந்தக் கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் பெரியளவில் ஆதரவு அளித்ததால் ஒயிட் ரேஞ்சராகவும் குழுவின் தலைவராகவும் மாற்றப்பட்டார்.
அந்தத் தொடரில் மொத்தமாக 123 எபிசோட்களில் அவர் நடித்தார். ஃபிராங்க், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஃபிராங்குக்கு முதல் திருமணத்தில் மூன்று குழந்தைகளும் 2-வது திருமணத்தில் ஒரு குழந்தையும் உள்ளார்கள். இந்நிலையில் ஃபிராங்க் மறைந்து விட்டதாக அவருடைய மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார். அவர் எப்போது, எதனால் இறந்தார் என்கிற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. ஃபிராங்கின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

மலேசியாவில் அஜித்தை சந்தித்தார் சிம்பு: சமூக வலைதளங்களிர் வைரல்!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:59:25 AM (IST)

பிரபுதேவா-வின் 'மூன்வாக்' படத்தில் 5 பாடல்களை பாடிய ஏ.ஆர்.ரகுமான்!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:20:25 AM (IST)

நடிகை சமந்தா 2-வது திருமணம்: இயக்குநரை கரம்பிடித்தார்
திங்கள் 1, டிசம்பர் 2025 3:50:33 PM (IST)

நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சனி 29, நவம்பர் 2025 4:05:40 PM (IST)

