» சினிமா » செய்திகள்
இரட்டைக் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நயன்தாரா
செவ்வாய் 25, அக்டோபர் 2022 10:57:57 AM (IST)
விக்னேஷ் சிவன் - நயன்தாரா தங்களது இரட்டைக் குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து சொன்ன விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவன் - நயன்தாராவுக்கு சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் பிறந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், இதுபற்றி விசாரிக்க சுகாதாரத் துறை சார்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. திரைப் பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தங்களது இரட்டைக் குழந்தைகளுடன் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த விடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலானது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

மலேசியாவில் அஜித்தை சந்தித்தார் சிம்பு: சமூக வலைதளங்களிர் வைரல்!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:59:25 AM (IST)

பிரபுதேவா-வின் 'மூன்வாக்' படத்தில் 5 பாடல்களை பாடிய ஏ.ஆர்.ரகுமான்!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:20:25 AM (IST)

நடிகை சமந்தா 2-வது திருமணம்: இயக்குநரை கரம்பிடித்தார்
திங்கள் 1, டிசம்பர் 2025 3:50:33 PM (IST)

நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சனி 29, நவம்பர் 2025 4:05:40 PM (IST)

