» சினிமா » செய்திகள்

மக்களை சட்டத்துக்குள் திணிக்கக்கூடாது : மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சு

திங்கள் 16, மார்ச் 2020 8:43:15 AM (IST)

மக்களுக்கு எது தேவையோ, அதை சட்டமாக்க வேண்டும். மக்களை சட்டத்துக்குள் திணிக்கக்கூடாது. என்று மாஸ்டர்  இசை வெளியீட்டு  விழாவில் நடிகர் விஜய் பேசினார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி வில்லனாக வருகிறார். மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. விழாவுக்கு, ரசிகர்கள் அழைக்கப்படவில்லை. நடிகர்-நடிகைகள் மற்றும் மாஸ்டர் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர். விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:-

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ரசிகர்கள் வரமுடியவில்லை என்ற வருத்தம் எனக்கு உள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஏற்கனவே நடந்த ஒரு விழாவில், அரங்கத்துக்கு வெளியே நடந்த விஷயங்கள்தான். இந்த விழாவை நடத்துவதற்கும் கூட அரை மனதோடுதான் ஒப்புக்கொண்டேன். இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அவர் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறார். ஒரு நாள் அவரிடத்திலேயே, இந்த படத்தில் நடிக்க ஏன் ஒப்புக்கொண்டீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே ‘எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்’ என்றார். விஜய் சேதுபதி சிறு, சிறு வேடங்களில் நடித்து இப்போது நல்ல நிலையில் இருக்கிறார். அவர் வில்லனாக இந்த படத்தில் நடிக்க அவசியம் இல்லை. ஆனாலும் நடிக்க ஒப்புக்கொண்டார். இதற்காக அவருக்கு நன்றி.

வாழ்க்கை என்பது நதி போன்றது. அதில் கல் எறிவார்கள். வரவேற்பார்கள். வணங்கவும் செய்வார்கள். இப்படி எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். ஆனாலும் நாம் நதி மாதிரி, கடமையை செய்துகொண்டே இருக்க வேண்டும். வாழ்க்கை குறுகியது. பிரச்சினைகள் வரும், போகும். அதுபற்றி எல்லாம் பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். எனக்கு ஒரு பிரச்சினை வந்ததும், ஏராளமானோர் திரண்டு வந்தனர். அதில் மறக்க முடியாத தருணம், எனது ரசிகர்கள் வேற லெவல். இந்த விழாவில் நான் அணிந்து வந்த ‘கோட்-சூட்’ அழகாக இருப்பதாக பேசினார்கள். நண்பர் அஜித் மாதிரி வரலாமே என்று, இந்த உடை அணிந்து வந்தேன். மக்களுக்கு எது தேவையோ, அதை சட்டமாக்க வேண்டும். மக்களை சட்டத்துக்குள் திணிக்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் விஜயிடம், நீங்கள் 20 வருடத்துக்கு முந்தைய வாழ்க்கைக்கு சென்றால், அப்போதைய விஜய்க்கு என்ன அறிவுரை சொல்வீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஜய், ரெய்டு எல்லாம் இல்லாத அமைதியான வாழ்க்கை வேண்டும் என்று கேட்பேன். இப்போதும் நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். உண்மையாக இருக்கவேண்டும் என்றால் சில நேரம் ஊமையாகவும் இருக்க வேண்டும் என்று பதில் அளித்தார். 


மக்கள் கருத்து

உண்மைMar 16, 2020 - 04:35:35 PM | Posted IP 108.1*****

அடே மேலை நாட்டிற்கு மண்டியிடும் அடிமை, கூத்தாடி என்றால் நடிக்கிற அனைவரும்தான்!

உண்மை என்ற கூமுட்டை க்குMar 16, 2020 - 03:33:19 PM | Posted IP 162.1*****

ரஜினியும் கூத்தாடிதானே .. அப்படியே அவர்கிட்டே சொல்லுங்க ..

உண்மைMar 16, 2020 - 01:56:11 PM | Posted IP 162.1*****

முட்டா கூத்தாடி பயலுகளே முதலில் வரியை முறைப்படி செலுத்துங்கள்! ஒழுக்கமான வாழ்க்கை வாழுங்கள்! அப்புறம் இந்த சோசப்புக்கு தமிழகத்தில் பொண்ணு இல்லைனு இங்கிலாந்தில் போயி தேடி பிடிச்சு கல்யாணம் செஞ்சாங்க! இந்த லட்சணத்தில் இதெல்லாம் அறிவுரை கூறுது!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer EducationThoothukudi Business Directory