» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

சென்னை – தூத்துக்குடி பயணிகள் கப்பல் சேவை குறித்து ஆய்வு : சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்

செவ்வாய் 28, ஜூன் 2022 10:27:45 AM (IST)சென்னை – தூத்துக்குடி பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

வெளிமாநில சுற்றுலா பயணியரை ஈர்க்கும் வகையில், மாநில சுற்றுலாத் துறை தொடர் முயற்சி எடுத்துவருகிறது. அதன் ஒருபகுதியாகச் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில் பயிற்சி முகாம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் மதி வேந்தன், "சுற்றுலாப் பயணிகளைக் கவனமாகக் கையாள வேண்டும். சுற்றுலா பயணியர் விரும்பும் வகை யிலும், அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலும் வழி காட்டிகள் செயல்பட வேண்டும்” என்றார். மொழியைப் புரிந்துகொள் ளும் வகையிலான, தெளிவான உரை யாடல், வரலாற்று அறிவு, பொறுமை ஆகிய அம்சங்களை டூரிஸ் கைடுகள் பெற்றிருக்க வேண்டும், அதற்காகத் தான் இந்த பயிற்சி அமைச்சர் குறிப்பிட்டார்,

சென்னை – தூத்துக்குடி பயணியர் கப்பல் போக்குவரத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம் எனக் கூறினார். மேலும், சென்னையிலிருந்து அருகாமையில் உள்ள இடங்களுக்குக் கடலில் படகு சேவையைத் தொடங்கு வது குறித்தும் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்த அவர், சுற்றுலாத்தலங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது. அதேவேளையில் முகக்கவசம் அணிய வேண்டும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட அரசின் வழிகாட்டுதல்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித் தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory