» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாமன்றத்தில் த்ரிஷா படத்தை வைக்க வேண்டும் : சுயேச்சை கவுன்சிலர் கோரிக்கையால் பரபரப்பு

புதன் 24, ஜூன் 2026 4:49:43 PM (IST)



காரைக்குடி மாமன்றக் கூட்டத்தில் நடிகை த்ரிஷாவின் படத்தை வைக்க வேண்டும் எனச் சுயேச்சை கவுன்சிலர் கோரிக்கை விடுத்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று காலை வழக்கம்போல் தொடங்கியது. கூட்டத்தில் உறுப்பினர்கள் தங்களது வார்டு கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.

அப்போது பேசிய 11-ஆவது வார்டு சுயேச்சை உறுப்பினர் மெய்யர், "மாமன்றக் கூட்டத்தில் நடிகை த்ரிஷாவின் படத்தை வைக்க வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக ஆட்சிக்கு வரக் காரணமே அவர்கள்தான். எனவே, அவர்களின் புகைப்படத்தை வைக்க வேண்டும். அடுத்த முதலமைச்சர் அவர்கள்தான்" எனக் கூறி முழக்கமிட்டார். த்ரிஷாவின் படத்தை ஏன் வைக்க வேண்டும் என மற்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதால், கூட்டத்தில் சிறிது நேரம் கடுமையான சலசலப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

சென்னை மாநகராட்சியில் காரசாரம்:

இதேபோல் இன்று காலை நடைபெற்ற சென்னை மாநகராட்சிக் கூட்டத்திலும் தவெக அரசுக்கு எதிராகப் புகார்கள் அடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. கூட்டத்தில் பேசிய மேயர், தவெக அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததுடன், மின்வெட்டுப் பிரச்சினையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், இதுதான் தவெக அரசின் சாதனையா என்றும் கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர்கள் தங்களது தலைவர்களைப் புகழ்ந்து பேசியதற்கு அதிமுக கவுன்சிலர் சதீஷ் எதிர்ப்பு தெரிவித்தார். மன்றத்தில் மக்கள் பிரச்சினைகளைப் பேசாமல் தலைவர்களைப் புகழ்ந்து நேரத்தை வீணடிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். இதற்குத் திமுக கவுன்சிலர்கள் குறுக்கிட்டு, "உங்களுக்குத்தான் தலைவர்களே கிடையாதே" எனக் கூற, இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் மோதலும் வெடித்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory