» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பேருந்து நிலையத்தில் இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை த.வெ.க. பிரமுகர் உள்பட 2பேர் கைது!
வெள்ளி 19, ஜூன் 2026 8:30:09 AM (IST)
திருவாரூர் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து, அச்சுறுத்தல் விடுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரைத் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலத்தம்பாடி கரும்பியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (த.வெ.க. திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர்). இவரும், இவரது நண்பரான அசோக் என்பவரும் திருவாரூர் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது, பேருந்து நிலையத்தில் 27 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் தனது தந்தையின் வருகைக்காகத் தனியாகக் காத்துக் கொண்டிருந்தார்.
இதனைப் பயன்படுத்திக் கொண்ட ஆனந்த் மற்றும் அசோக் ஆகிய இரு நபர்களும் அந்தப் பெண்ணை நெருங்கி, அநாகரிகமான முறையில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அவர்களின் அத்துமீறலால் செய்வதறியாது திகைத்து நின்ற அந்தப் பெண்ணை அழைக்க, அவரது தந்தை பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். தப்பியோட முயன்ற நபர்களைப் பார்த்த தந்தை, நடந்த விபரங்களைத் தனது மகள் கூறிக் கதறியதைக் கேட்டு ஆத்திரமடைந்தார்.
உடனடியாகச் செயல்பட்ட அவர், பாலியல் தொல்லை கொடுத்த ஆனந்த் மற்றும் அசோக் வந்த மோட்டார் சைக்கிளின் சாவியைத் துணிச்சலாகப் பறித்துக் கொண்டார். பின்னர், தனது மகளை அழைத்துக் கொண்டு நேராகத் திருவாரூர் டவுன் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார்.
பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், திருவாரூர் டவுன் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர். பொது மக்கள் கூடும் இடத்தில் ஆபாசமாகப் பேசுவது தீங்கு விளைவிக்கும் வகையில் அச்சுறுத்தல் அளிப்பது, மற்றும் பாலியல் தொல்லை கொடுப்பது உள்ளிட்ட 3 கடுமையான பிரிவுகளின் கீழ் த.வெ.க. நிர்வாகி ஆனந்த் மற்றும் அவரது நண்பர் அசோக் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் இருவரும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் திருவாரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மூலைக்கரைப்பட்டி தான்தோன்றி குளம் தூர் வாரும் பணி துவக்கம்: விவசாயிகள் பெருமகிழ்ச்சி!!
வெள்ளி 19, ஜூன் 2026 3:43:39 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 11 மையங்களில் நீட் மறுதேர்வு: கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 11:41:46 AM (IST)

மேகேதாட்டு அணை விவகாரம் : சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனித் தீர்மானம் நிறைவேற்றம்!
வெள்ளி 19, ஜூன் 2026 11:26:14 AM (IST)

திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலை நாகர்கோவிலில் இருந்து இயக்கக் கோரிக்கை!
வெள்ளி 19, ஜூன் 2026 10:08:26 AM (IST)

கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் உயிர் தப்பிய மாணவி சாதனை: உதவி இயக்குநராக நியமனம்!
வெள்ளி 19, ஜூன் 2026 8:10:26 AM (IST)

திரிவேணி சங்கமத்தில் ஜூன் 26-ல் குமரி விழா தொடக்கம் - சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!
வியாழன் 18, ஜூன் 2026 8:06:58 PM (IST)










IndianJun 19, 2026 - 11:50:56 AM | Posted IP 172.7*****